இந்தியா

23 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ்-அப் கணக்குகள் முடக்கம்.. இந்த ஒரே ஒரு காரணம் தான்!

Published

on

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று வாட்ஸ்அப் என்பதும் இதை பில்லியன் கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் விதிகளை மீறும் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கும் நடவடிக்கையில் வாட்ஸ்அப் நிர்வாகம் செய்து வரும் நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23 லட்சம் இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி வாட்ஸ் அப் உள்பட அனைத்து சமூக வலைதளங்களிலும் வரும் புகார்கள் குறித்த நடவடிக்கைகளை அறிக்கையை மத்திய அரசிடம் ஒவ்வொரு மாதமும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும்.

அந்தவகையில் விதிகளை மீறும் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்குவது குறித்து அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி அக்டோபர் மாதத்தில் மட்டும் தங்களுக்கு கிடைத்த புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்ததில் 23 லட்சத்து 24 ஆயிரம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டன என தெரிவித்துள்ளது. அதில் 8 லட்சத்து 11 ஆயிரம் கணக்குகள் புகார்கள் வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முடக்கப்பட்ட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வாட்ஸ்அப் சேவை குறைபாடு குறித்து 701 புகார்கள் வந்துள்ளதாகவும் அதில் ஒரு சில புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில புகார்கள் அடிப்படையில் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விதிகளை மீறும் வாட்ஸ்அப் பயனாளர்களின் கணக்குகள் குறித்து தாங்கள் தீவிர கவனம் செலுத்துவதாகவும் வாட்ஸ்அப் நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை ஒரு கோடியே 52 லட்சத்து வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதாகவும் இவற்றில் பெரும்பாலும் தனிநபர் உரிமையை மீறும் வகையில் இருந்ததால் முடக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் என்பது சமூக வலைத் தளமாக இருந்தாலும் அதில் விதிகளை மீறி பிறருக்கு அச்சம் விளைவிக்கும் வகையில் பதிவு செய்பவர்கள் கணக்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப் சமூக வலைத்தளத்தை பயன்படுத்துபவர்கள் விதிகளை மீறாமல் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.

Trending

Exit mobile version