தமிழ்நாடு

மொத்தம் 23 மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை: முழு விபரங்கள்!

Published

on

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை உள்பட பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனையொட்டி ஒருசில மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை காரணமாக சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை மேலும் 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே 10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மேலும் 13 மாவட்டங்களுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள 23 மாவட்டங்களின் பெயர்கள் பின்வருமாறு: சேலம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், நாகை, திருச்சி, விழுப்புரம், தஞ்சை, கடலூர்,மயிலாடுதுறை, தி.மலை, கரூர், திருப்பத்தூர் மாவட்டங்களுக்கும், கொடைக்கானல் பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version