இந்தியா

உலகின் மிக அதிகமான மாசடைந்த நகரங்கள்: 30 நகரங்களில் 22 இந்தியாவில்?

Published

on

உலகின் மிக மோசமாக மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதாக சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆய்வு செய்யும் நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ளது.

உலகிலேயே அதிக மாசடைந்த நகரம் டெல்லி தான் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. உலகில் உள்ள நாடுகளில் உள்ள 106 முக்கிய நகரங்களில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து சுவிஸ் நாட்டின் தொழில் நுட்ப நிறுவனம் ஒன்று ஆய்வு செய்து வந்தது.

இதில் உலகின் மிக மோசமாக மாசடைந்த முதல் 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் உள்ளன என்று அறிவித்துள்ளது. உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல் உள்ள நகரங்களில் முதலிடத்தில் இந்திய தலைநகர் டெல்லி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மாசடைந்த இந்திய நகரங்களில் பட்டியல் பின்வருமாறு:

காசிதாபாத், புலந்த்சஹார், பிஸ்ராக் ஜலாபூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ, மீரத், ஆக்ரா, முசாபர் நகர், பிவாரி, பரிதாபாத், ஜிந்த், ஹிஸார், ஃபதேபாத், பந்த்வாரி, குருகிராம், யமுனா நகர், ரோஹ்டக், தாருஹேரா, முசாபர்பூர்.

இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த எந்த நகரமும் இல்லை என்பது ஆறுதல் கூறிய ஒரு விஷயமாகும்.

Trending

Exit mobile version