தமிழ்நாடு

மேலும் 4 மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை! மொத்தம் 22 மாவட்டங்களில் விடுமுறை!

Published

on

தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று 18 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று வெளியான செய்தியை சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது மேலும் 4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்த மாவட்டத்தின் நிர்வாக அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கனமழை காரணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும், தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 18 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் தற்போது மேலும் நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் இதனையடுத்து மொத்தம் 22 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version