உலகம்

காண்டாக்ட் லென்ஸ் அணிந்த 21 வயது இளைஞர்.. சிறு தவறால் பார்வை இழக்கும் அபாயம்..!

Published

on

காண்டாக்ட் லென்ஸ் அணிந்த 21 வயது இளைஞர் ஒருவர் ஒரு சிறு தவறு செய்ததால் பார்வை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது.

கண்ணாடி அணிபவர்களுக்கு காண்டாக்ட் லென்ஸ் என்பது ஒரு வரப்பிரசாதம் என்பதும் பார்ட்டிகள், சாகசங்கள் மற்றும் பிற பணிகளின் போது கண்ணாடி அணிந்து செய்வதை விட காண்டாக்ட் லென்ஸ் அணிந்து செய்வது என்பது மிகவும் எளிதானது என்பதும் தெரிந்தது.

#image_title

#image_titleகாண்டாக்ட் லென்ஸை பலர் நாள் கணக்கில் வருடக்கணக்கில் அணிந்து வருகின்றனர் என்பதும் இதனால் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பதால் மருத்துவர்கள் காண்டாக்ட் லென்ஸை பரிந்துரை செய்கிறார்கல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா என்ற பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மைக் க்ரம்ஹோல்ஸ் என்பவர் கடந்த சில ஆண்டுகளாக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து உள்ளார். இந்த நிலையில் அவர் ஒரு நாள் தற்செயலாக காண்டாக்ட் லென்ஸை எடுக்காமல் தூங்கிவிட்டதை அடுத்து விழித்து பார்க்கும்போது அவரது கண்கள் சிவப்பு நிறத்துடன் இருந்தது.

முதலில் நான் அதை அலர்ஜி என்று நினைத்து கண் டாக்டரிடம் காண்பித்தேன் என்றும் ஒரு சில கண் டாக்டர்கள் கண்ணில் ஏற்பட்ட உண்மையான பிரச்சனையை கண்டறியாமல் சாதாரண சிகிச்சை அளித்தனர் என்றும் அவர் தெரிவித்தார். அதன் பிறகு தான் ஒரு டாக்டர் சரியாக ஒரு அரிய வகை ஒட்டுண்ணி கண்ணில் இருப்பதை கண்டுபிடித்ததாகவும் காண்டாக்ட் லென்ஸ் அணிந்து தூங்கியதால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்போது அவரது கண் மிக மோசமான அளவில் பாதித்துள்ளதாகவும் அந்த ஒட்டுண்ணி கண்ணில் உள்ள சதையை உண்ணும் என்பதால் கண் பார்வை கிட்டத்தட்ட போய்விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் அவருடைய கண்பார்வையை மீண்டும் சரி செய்து விடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்துள்ளனர்.

இந்த ஒட்டுண்ணி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் தூங்கும்போது கண்டிப்பாக காண்டாக்ட் லென்ஸை கழட்டிவிட்டு தூங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. கண்வலி, கண் சிவத்தல், மங்கலான பார்வை, கண்ணில் ஏதோ ஒரு உணர்வு ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக கண் மருத்துவரிடம் சென்று பார்க்க வேண்டும் என்றும் கண்ணில் உள்ள கிருமிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version