இந்தியா

இன்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு: எங்கு தெரியுமா?

Published

on

இன்று ஒரே நாளில் 21 பேர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியாவிலும் நுழைந்தது என்பதும் தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 21 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அம்மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே உலக அளவில் இன்னும் இரண்டு மாதங்களில் ஒமிக்ரான் பாதிப்பு 10 லட்சத்தைத் தாண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்தியா உட்பட பல நாடுகளில் ஒமிக்ரான் தொற்று மிக வேகமாகப் பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒமிக்ரான் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள கண்டிப்பாக தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை வீட்டிலிருந்தே கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Trending

Exit mobile version