தமிழ்நாடு

21 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை!: எந்தெந்த மாவட்டங்கள்?

Published

on

வங்க கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மற்றும் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்தவகையில் கனமழை காரணமாக கடந்த சில நாட்களாகவே பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் 21 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் இதில் 7 மாவட்டங்களுக்கு கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதை தற்போது பார்ப்போம்:

கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, நெல்லை தூத்துக்குடி தென்காசி விருதுநகர் தேனி திண்டுக்கல்,

மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version