விளையாட்டு

2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் எந்த நாட்டில்? அதிகாரபூர்வ அறிவிப்பு!

Published

on

உலகின் முக்கிய விளையாட்டு போட்டிகளில் ஒன்று ஒலிம்பிக் போட்டிகள் என்பதும், உலகின் அனைத்து நாடுகளின் வீரர்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புவார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் காரணமாக ஒரு ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது என்பதும், வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் தொடங்கவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் நாடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

கடந்த 1896ம் ஆண்டு முதன்முதலாக கிரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டது. அதன் பின் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்பட பல நாடுகளில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்று வரும் நிலையில் 2022ல் சீனாவும், 2024ல் பிரான்ஸ் நாடும், 2026ல் இத்தாலியும், 2028ல் அமெரிக்காவிலும் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தற்போது 2032 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு முன்பாக 2030ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை இந்தியாவில் ஒரு முறை கூட ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறாத நிலையில் ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியாவுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version