வணிகம்

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

Published

on

2024-ம் ஆண்டு தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட முடியாத நிலையில், டிக்டாக், அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் என பல்வேறு முக்கிய நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக வெளியிட்டுள்ள அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2024-ம் ஆண்டு இதுவரையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை?

2024-ம் ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் குறித்த தகவலை வெளியிட்ட Layoffs.fyi இணையதளம், இதுவரையில் 93 நிறுவனங்கள் 24,584 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

எனவே அண்மையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள முக்கிய நிறுவனங்களின் பட்டியலை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.

மைக்ரோசாஃப்ட்

மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தங்களது கேமிங் பிரிவிலிருந்து 8 சதவிகித ஊழியர்கள், அதாவது 1900 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

டிக்டாக் நிறுவனம்

#image_title

சீனாவின் பீஜிங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பைட்டான்ஸ் நிறுவனம், தங்களது டிக்டாக் செயலியின் விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவிலிருந்து 60 நபர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

இ-பே

ebay

ஆன்லைன் இ-காமர்ஸ் தளமான இ-பே தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையில் 9 சதவிகிதம், அதாவது 1000 நபர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

கூகுள்

google layoff

சென்ற ஆண்டு கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ள நிலையில், அண்மையில் 100 ஊழியர்களைக் கூகுளிலிருந்து நீக்கியுள்ளது.

அமேசான் டிவிட்ச்

அமேசானின் வீடியோ கேம் லைவ் ஸ்டிரீமிங் தளமான டிவிட்ச் அதிகரித்து வரும் செலவினங்களைக் குறைக்கும் விதமாக, 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

ஏன் இந்த பணிநீக்கம் செய்யப்படுகிறது?

கொரோனா கால கட்டத்தில், ஊழியர்கள் பெரும்பாலும் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதனால் பணிகள் தொய்வில்லாமல் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நிறுவனங்கள் கூடுதலாக ஊழியர்களை பணிக்கு எடுத்தன. இப்போது ஊழியர்கள் அலுவலகம் இயல்பாகி வருவதால் தங்களது செலவுகளை குறைக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன் காரணமாகவே பல்வேறு நிறுவனங்கள் பணி நீக்க அறிவிப்ப வெளியிடக் காரணமாக அமைந்துள்ளது என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

Tamilarasu

Trending

Exit mobile version