கிரிக்கெட்

2023-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் அட்டவணை- ஐசிசி வெளியீடு

Published

on

2023-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான அட்டவணைய ஐசிசி வெளியிட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளை முதன்முறையாக ஐசிசி அறிமுகம் செய்து வைத்தது. உலக அளவில் டெஸ்ட் போட்டிகளை நடந்த தகுதியான நாடுகளுக்கு மத்தியில் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும். 2021-ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் தான் நடந்து முடிந்தது. இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின.

இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. தற்போது 2023-ம் ஆண்டுக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஐசிசி நடத்தும் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாட 9 நாடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் நாடுகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி மார்ச் 2023-ம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

9 நாட்டு கிரிக்கெட் அணிகளும் 3 போட்டிகளை தங்களது தாய் மண்ணிலும் 3 போட்டிகளை வெளிநாட்டு மைதானங்களிலும் விளையாடுகின்றனர். இந்தியா தனது தாய் மண்ணில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் உடனும் வெளிநாட்டு மைதானங்களில் வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளுடனும் மோத உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version