தமிழ்நாடு

தீபாவளி, பொங்கல், ரம்ஜான் உள்பட அனைத்தும் சனி-ஞாயிறுதான்.. 2023ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள்!

Published

on

2023 ஆம் ஆண்டின் தமிழக அரசின் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, ரம்ஜான், முகரம், விநாயகர் சதுர்த்தி போன்ற பல விடுமுறை நாட்கள் சனி ஞாயிறு தினங்களில் வருவதால் அரசு ஊழியர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை தினங்கள் அறிவிக்கப்படும் என்பதும் அந்த அறிவிப்பில் எத்தனை விடுமுறை நாட்கள் என்பதை தெரிந்து கொள்வதில் அரசு ஊழியர்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது 2023 ஆம் ஆண்டின் விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகி உள்ள நிலையில் அந்த பட்டியலில் மொத்தம் 24 நாட்கள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 நாட்கள் சனி ஞாயிறு விடுமுறை நாட்களாக இருப்பதால் அரசு ஊழியர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த 8 நாட்களை கழித்துவிட்டால் 16 நாட்கள் மட்டுமே வேலை நாட்களில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

2023ஆம் ஆண்டின் அரசு விடுமுறை தினங்களில் பட்டியல் இதோ

1 01.01.2023 ஞாயிறு: புத்தாண்டு தினம்
2 15.01.2023 ஞாயிறு: பொங்கல்
3 16.01.2023 திங்கட்கிழமை: திருவள்ளுவர் தினம்
4 17.01.2023 செவ்வாய்கிழமை: உழவர் திருநாள்
5 26.01.2023 வியாழன்; குடியரசு தினம்
6 05.02.2023 ஞாயிறு: தை பூசம்
7 22.03.2023 புதன்கிழமை: தெலுங்கு புத்தாண்டு தினம்
8 01.04.2023 சனிக்கிழமை: வங்கி ஆண்டு நிறைவு கணக்குகள்
9 04.04.2023 செவ்வாய்: மகாவீர் ஜெயந்தி
10 07.04.2023 வெள்ளி: புனித வெள்ளி
11 14.04.2023 வெள்ளி: தமிழ் புத்தாண்டு பி.ஆர் அம்பேத்கர் பிறந்த நாள்
12 22.04.2023 சனிக்கிழமை: ரம்ஜான்
13 மே தினம் 01.05.2023 திங்கட்கிழமை
14 29.06.2023 வியாழன்: பக்ரீத்
15 29.07.2023 சனிக்கிழமை: முஹர்ரம்
16 15.08.2023 செவ்வாய்: சுதந்திர தினம்
17 06.09.2023 புதன்கிழமை: கிருஷ்ண ஜெயந்தி
18 17.09.2023 ஞாயிறு: விநாயகர் சதுர்த்தி
19 28.09.2023 வியாழன்: மீலாத்-உன்-நபி
20 02.10.2023 திங்கட்கிழமை: காந்தி ஜெயந்தி
21 23.10.2023 திங்கட்கிழமை: ஆயுத பூஜை
22 24.10.2023 செவ்வாய்: விஜய தசமி
23 12.11.2023 ஞாயிறு: தீபாவளி
24 25.12.2023 திங்கட்கிழமை: கிறிஸ்துமஸ்

seithichurul

Trending

Exit mobile version