இந்தியா

2023ஆம் ஆண்டில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை? முழு விபரங்கள்!

Published

on

இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் தேசிய வங்கிகளைப் பொறுத்த வரை நாடு முழுவதும் ஒரே மாதிரியான விடுமுறைகள் அளிக்கப்பட்டு வந்தாலும் ஒரு சில நாட்கள் மட்டும் அந்தந்த மாநிலத்தில் உள்ள விழாக்களை பொருத்து கூடுதலாக விடுமுறை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு மாதமும் 2வது சனிம் 4வது சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுபோக வங்கிகளுக்கு சில முக்கிய நாட்களிலும் நாடு முழுவதிலும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

தற்போது ஆன்லைன் மூலம் வங்கி பரிவர்த்தனை பெரும்பாலும் நடந்து கொண்டாலும் ஒரு சில முக்கிய காரணங்களுக்காக நாம் வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருப்பதால் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியமானதாகும். அந்த வகையில் இந்தியாவில் உள்ள வங்கிகளில் 2023ஆம் ஆண்டில் எத்தனை விடுமுறை நாட்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

ஜனவரி 1: புத்தாண்டு விடுமுறை

ஜனவரி 23: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி

ஜனவரி 26: குடியரசு தினம்

பிப்ரவரி 18: மகா சிவராத்திரி விடுமுறை

மார்ச் 8: ஹோலி விடுமுறை

மார்ச் 22: உகாதி விடுமுறை

மார்ச் 30: ராம நவமி

ஏப்ரல் 4: மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 7: புனித வெள்ளி

ஏப்ரல் 14: டாக்டர் அம்பேத்கர் ஜெயந்தி, தமிழ்ப்புத்தாண்டு

ஏப்ரல் 22: இத்-உல்-பித்ர்

மே 1: தொழிலாளர் தினம்

மே 5: புத்த பூர்ணிமா

ஜூன் 29: பக்ரீத்/ ஈத் அல் அதா

ஜூலை 29: முஹர்ரம்

ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்

ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு

ஆகஸ்ட் 31: ரக்ஷா பந்தன்

செப்டம்பர் 7: ஜன்மாஷ்டமி

செப்டம்பர் 19: விநாயக சதுர்த்தி

செப்டம்பர் 28: ஈத் இ மிலாத்

அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி

அக்டோபர் 21: மகா சப்தமி

அக்டோபர் 22: மஹா அஷ்டமி

அக்டோபர் 23: மகா நவமி

அக்டோபர் 24: விஜயதசமி

நவம்பர் 12: தீபாவளி

நவம்பர் 13: தீபாவளி விடுமுறை

நவம்பர் 15: பாய் தூஜ்

நவம்பர் 27:குருநானக் ஜெயந்தி

டிசம்பர் 25: கிறிஸ்துமஸ் தினம்

seithichurul

Trending

Exit mobile version