Connect with us

வணிகம்

2021 ஆம் ஆண்டு இந்தியாவில் சம்பள உயர்வு மந்தமாக இருக்கும்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Published

on

2021 will be a sober year for pay hikes in india

சென்னை: இந்தியாவில் 2021 ஆம் ஆண்டு சம்பள உயர்வு சராசரியாக 6.4% சதவிகிதம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் மிக குறைந்த அளவிலான கணிப்பு இதுவாகும். இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் உண்மையில் அதிகரித்த 5.9% விட சற்றே அதிகமாகும் என்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டின் சம்பள உயர்வின் அடிப்படையில் ஆசியா-பசுபிக் சந்தையில் இந்தியா முதல் இரண்டு இடத்திற்குள் வந்துள்ளது. இந்தோனேசியாவில் சம்பள உயர்வு 6.5%, சீனா 6%, பிலிப்பைன்ஸ் 5%, சிங்கப்பூர் 3.5% மற்றும் ஹாங்காங் 3% என கணிக்கப்பட்டுள்ளதாக வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் கூறியுள்ளது.

கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் 9.8% உயர்வு இருக்கும் என்று நிறுவனம் கணித்திருந்தது, ஆனால் 2020 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் பெறப்பட்ட 18,000 பதில்களின் பகுப்பாய்வு 2021 சம்பள உயர்வுக்கு ஒரு நிதானமான ஆண்டாக இருக்கும் என்று கூறுகிறது.

முந்தைய ஆண்டுகளில் பணவீக்கத்திற்கு அப்பால் நிறுவனங்கள் வழங்கிய சில பிரீமியம் இருந்தபோதும், சம்பள உயர்வு பொருளாதாரத்தில் பணவீக்கக் கூறுகளை ஈடுசெய்யும் என்று எங்கள் ஆய்வு முடிவு காட்டுகிறது என்று வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் ஆலோசனைத் தலைவர் ராஜுல் மாத்தூர் கூறினார்

Also Read: இனி அரசியல் வெறுப்பு பேச்சுக்களுக்கு இடமில்லை.. சாட்டையை சுழற்றிய பேஸ்புக்.. எங்கெல்லாம் கட்டுப்பாடு தெரியுமா?

இருப்பினும் வணிகங்களிடையேயான நம்பிக்கை திரும்பி வருவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த சர்வேயில் ஈடுபட்ட இந்திய நிறுவனங்களில் 37% நிறுவனங்கள் அடுத்த 12 மாதங்களுக்கு நேர்மறையான வருவாயைக் கணித்துள்ளனர், இது 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 18% என்கிற அளவில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

சம்பள உயர்வினால் இந்த வருடங்களில் நிறுவனங்களின் வரவுசெலவுத்திட்டங்கள் இறுக்கமாக இருப்பதால், நிறுவனங்கள் செயல்திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும். பட்ஜெட்டில் ஐந்தில் ஒரு பங்கு சிறந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

2021 will be a sober year for pay hikes in india

சராசரி ஊழியருக்கு 1 ருபாய் என்கிற அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டால், சிறந்த ஊழியருக்கு 2.35 ருபாய் என்கிற அளவில் ஒதுக்கப்படுகிறது. அதே நேரம் சராசரிக்கு மேல் உள்ள ஊழியருக்கு 1.25 ருபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு வரவுசெலவுத் திட்டத்தின் பெரும்பகுதி சிறந்த ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் என்று நிறுவனங்கள் கூறுகின்றன, மேலும் இந்த ஆண்டில் முதல் முறையாக வித்தியாசமான மற்றும் உயர் திறமைகளை பாதுகாப்பதற்காக அதிக ஒதுக்கீடு செய்யப்படுவதையும் நாங்கள் காண்கிறோம் என்று மாத்தூர் கூறினார்.

கொரோனா காலகட்டத்தில் வெவ்வேறு துறைகள் வித்தியாசமாக பாதிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தொழில்களின் சம்பள உயர்வு திட்டங்களில் பெரிய இடைவெளிகள் உள்ளன. உயர் தொழில்நுட்பம், மருந்துகள் மற்றும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் சில்லறை துறைகளில் சராசரி சம்பள உயர்வாக 8% ஆக இருந்தாலும், எரிசக்தித் துறை மிக குறைந்த அளவாக 4.6% உயர்வை காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டில் உயர் நிர்வாகத்திற்கான சம்பள உயர்வு 2020 உடன் ஒப்பிடும்போது பெரிய அளவில் மாற்றம் இருக்காது. கடந்தாண்டு 7.1% அளவில் இருந்த நிலையில் 2021ல் 7% ஆக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தர நிர்வாகத்திலும் சரிவு கொஞ்சம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 2020 ல் 7.5% உடன் ஒப்பிடும் போது 2021ல் 7.3% உயர்வு இருக்கும்.

உற்பத்தி மற்றும் கையேடு தொழிலாளர் குழுவில் உள்ள ஊழியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 7.7% சம்பள உயர்வு இருந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு 7.2% உயர்வு மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

author avatar
seithichurul
வணிகம்6 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு6 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா9 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்5 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்5 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்5 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்7 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!