தமிழ்நாடு

ஒபிஎஸ் வாயிலேயே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்த எடப்பாடி பழனிசாமி!

Published

on

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று கடந்த சில நாட்களாகச் சர்ச்சை எழுந்து வந்தது. இந்நிலையில், ஒபிஎஸ் வாயிலேயே தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வைத்ததுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இன்று அதிமுக கட்சியின் சார்பாக 2021-ம் ஆண்டு சந்திக்க இருக்கும் தேர்தலில், முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டது.

ஓபிஎஸ் வைத்த கோரிக்கைகளை ஏற்று 11 பேர் கொண்ட வழிக்காட்டு குழு, ஒருக்கிணைப்பாலர்கள அமைக்க ஒப்புக்கொண்ட எடப்பாடி பழனிசாமி அதை அறிவித்தார்.

அதை தொடர்ந்து ஓபிஎஸ் யார் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பார் என்று கூறப்பட்டது. அப்போதே முடிவாகிவிட்டது. ஓபிஎஸ் கோரிக்கைகளை ஈபிஎஸ் ஏற்றார். ஈபிஎஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று. அதை அப்படியே ஓபிஎஸ் அறிவித்தார்.

கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த அறிவிப்பை பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

ஓபிஎஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்று புதிய பொறுப்பை ஏற்றுள்ளார். ஆனாலும் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அவரது தொகுதியில் தொற்றால் ஓ பன்னீர்செல்வம் வெற்றி பெற்றால், ஓபிஎஸ் முதல்வராக வாய்ப்புகள் உண்டு.

seithichurul

Trending

Exit mobile version