வணிகம்

2021-ம் ஆண்டின் முதல் நாளே அதிர்ச்சி.. சிலிண்டர் விலை அதிகரிப்பு!

Published

on

ஜனவரி 1-ம் தேதியான இன்று முதல் 19 கிலோ எடை கொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 17 ரூபாய் அதிகரித்துள்ளது.

இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்தின் இணையதளத்தின் படி 14.2 கிலோ எடை கொண்ட, மானியம் இல்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் 710 ரூபாய், டெல்லியில் 694 ரூபாய், கொல்கத்தாவில் 720.50 ரூபாய், மும்பையில் 694 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மாற்றமில்லை.

19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 17 ரூபாய் அதிகரித்து, சென்னையில் 1463 ரூபாய், டெல்லியில் 1349 ரூபாய், கொல்கத்தாவில் 1410 ரூபாய், மும்பையில் 1294 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது.

2021 ஜனவரி மாதம் முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version