வைரல் செய்திகள்

அடேங்கப்பா.. அப்பவே அப்படி.. 2,000 வருடத்திற்கு முந்தைய ஃபாஸ்ட் புட் கடை கண்டுபிடிப்பு

Published

on

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியில், பாம்பேயி நகரில் செயல்பட்டு வந்த
துரித உணவுக் கடை ஓன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கி.பி 1979-ல் வெசுவியஸ் மலையில் ஏற்பட்ட எரிமலை சீற்றத்தால் இத்தாலின் பாம்பேயி நகரம் மூழ்கிப் மண்ணுக்குள் புதைந்து
போனது.

இந்த பாம்பெயி நகரத்தில் பல ஆண்டுகளாக தொல்பொருள் ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாய்வில் தெருவோர துரித உணவகம் ஓன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இவ்வுணவகமானது
ரோமாபுரி கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வழிப்போக்கர்களுக்காக இயங்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.

உணவகத்தில் உள்ள ஓவியத்தில் காணப்படும் படங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது சூடான உணவுகளை விற்பனை செய்த டெர்மோபோலியம் எனும் துரித உணவகம் உணவகமாகும்.

இங்கு பழமையான சுடுமண் அடுப்பில் சமைத்து, சுடுமண் கூஜாவில் கடையின் உரிமையாளர் உணவை வைத்துள்ளதை ஆராய்ச்சியில் கண்டறிந்து உள்ளனர். இந்த உணவகத்தில் மாடு, மீன், பன்றி உள்ளிட்ட இறைச்சிகள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் உள்ளது.

கடையின் முன்பகுதியில் வண்ண நிறத்தால் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. மேலும் கோழி மற்றும் வாத்தின் படங்களும் வரையப்பட்டுள்ளன. இந்த துரித உணவுக்கடை கண்டுபிடிப்பு தொல்பொருள் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதையடுத்து இந்த துரித உணவகத்தை அடுத்த ஆண்டு, மக்களின் பார்வைக்கு திறந்துவிட முடிவு செய்துள்ளது இத்தாலிய தொல்பொருள் ஆய்வு துறை.

Trending

Exit mobile version