தமிழ்நாடு

தேர்தல் முடிந்ததும் கண்டிப்பாக 2000 ரூபாய் உண்டு: பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி!

Published

on

மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்பு நிதியாக வழங்கப்படும் என அறிவித்தது.

ஆனால் இது தேர்தலை மனதில் வைத்து வெளியாகி இருக்கும் அறிவிப்பு, இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது, எனவே அதிமுக தேர்தலில் வாக்குக்கு பணம் அளிப்பது போல் ஆகிவிடும் இந்த 2000 ரூபாய் அறிவிப்பு எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என அப்போதே நீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் நாடியது திமுக. இதனையடுத்து இந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் உள்ளது.

இந்நிலையில் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த இரண்டாயிரம் ரூபாய் குறித்து பேசி வருகிறார். விருதுநகரில் நேற்று பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, தைப்பொங்கலுக்கு எல்லா குடும்பத்துக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

அதேபோல 60 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் கொடுக்கும் திட்டத்துக்கு எதிராக திமுக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துத் தடுத்துவைத்துள்ளது. எல்லா தொழிலாளர்களுக்கும் 2000 ரூபாய் கொடுக்கும் இத்திட்டத்தைத் தேர்தலுக்குப் பிறகு கட்டாயமாக நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version