வணிகம்

2,000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

Published

on

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக இந்தியன் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரையில், 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகள்

2000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடம் இருந்து திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ஆகவே, 2,000 ரூபாய் நோட்டுகளை, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் விநியோகிக்கக் கூடாது. இந்த நடைமுறை இப்போது உடனடியாக அமலுக்கு வருகிறது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை, மே மாதம் 23 ஆம் தேதி முதல் அனைத்து வங்கிகளிலும் கொடுத்து, தங்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாக கூட மாற்றிக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் ஒரு நபர், அதிகபட்சமாக 20,000 ரூபாய் வரை வங்கிகளில் வரவு வைக்க முடியும் அல்லது மாற்ற முடியும்.

திரும்பப் பெறப்படும் 

பொதுமக்கள் அனைவரும் எந்த ஒரு வங்கிக் கிளையிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள முடியும். இதற்கான வாய்ப்பு வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். 2,000 ரூபாய் நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்படவில்லை. அதே நேரத்தில், அவை அனைத்தும் திரும்பப் பெறப்படுகின்றன.

கருப்பு பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 2,000 ரூபாய் நோட்டுப் புழக்கத்தை ஏற்கெனவே ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தத் தொடங்கி விட்டது. இதனால், சந்தையில் அதன் புழக்கம் பெருமளவில் குறைந்து விட்டது.

seithichurul

Trending

Exit mobile version