இந்தியா

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 நோயாளிகள் மரணம்: ஆபத்தான நிலையில் மேலும் 200 பேர்!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் சுமார் 3.50 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கொரோனா நோயாளிகளுக்கு தர வேண்டிய ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. டெல்லி உள்பட இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதன் காரணமாக நோயாளிகள் பலர் சிக்கலில் உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி டெல்லி ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக 20 நோயாளிகள் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அதே மருத்துவமனையில் மேலும் 200 நோயாளிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து டெல்லி அரசும், மத்திய அரசும் உடனடியாக உயிர்காக்கும் ஆக்சிஜனுக்கு ஏற்பாடு செய்து நோயாளிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Trending

Exit mobile version