இந்தியா

திடீரென தீப்பிடித்து எரிந்த 20 மின்சார ஸ்கூட்டர்கள்: அதிர்ச்சி தகவல்

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து பொதுமக்கள் தற்போது மின்சார ஸ்கூட்டர்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர்

ஆனால் மின்சார ஸ்கூட்டர்கள் திடீர் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வருவதும் அதனால் ஒரு சிலர் பலியாகி வருவது மான தகவல்கள் மின்சார ஸ்கூட்டர் மீது உள்ள நம்பிக்கையை இழக்கச் செய்துவிடுகிறது

ஏற்கனவே மார்ச் மாதத்தில் வேலூர் அருகே தந்தை மகள் ஆகிய இருவர் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததால் பலியாகினர். அதுமட்டுமின்றி புனே, திருச்சி சென்னை உள்பட பல பகுதிகளில் அவ்வப்போது திடீர் திடீரென மின்சாரம் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன

இந்த நிலையில் மும்பையில் இருந்து ஆக்ரா செல்லும் வேன் ஒன்றில் 40 மின்சார ஸ்கூட்டர்கள் எடுத்துச் செல்லப்பட்டன. அதில் திடீரென 20 மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் மின்சார ஸ்கூட்டரில் உள்ள பேட்டரி அதிகமாக சூடாக இருப்பதால் தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது

பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக மின்சார ஸ்கூட்டர்களை பொதுமக்கள் பயன்படுத்த நினைக்கும் இந்த நேரத்தில் மின்சார ஸ்கூட்டர் கடைப்பிடித்து வருவதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version