சினிமா செய்திகள்

ஒரே நாளில் வெளியாகும் 2 படங்கள்… கொண்டாடும் விஜய் சேதுபதி ரசிகர்கள்

Published

on

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் வில்லன் ஆக அவதாரம் எடுத்துள்ள படம் உப்பென்னா. இந்தத் திரைப்படம் வருகிற பிப்ரவரி 12-ம் தேதி வெளியாக உள்ளது. மாஸ்டர் திரைப்படத்துக்குப் பின்னர் மீண்டும் வில்லன் ஆக விஜய் சேதுபதி வருவதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். விஜய் சேதுபதி தற்போது தமிழில் மட்டுமல்லாது பல மொழிப் படங்களிலும் நடிப்பதால் அவரது நடிப்புக்காகவே எந்த மொழியில் நடித்தாலும் விஜய் சேதுபதியைப் பார்ப்போம் என ரசிகர்கள் சமுக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதுபோக, பிப்ரவரி 12-ம் தேதியே தமிழில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஆந்தாலஜி படமான ‘குட்டி ஸ்டோரி’ வெளியாக உள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அதிதி பாலன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நான்கு கதைகள் இடம் பெற்றுள்ளன. நான்கு கதைகளில் முதல் கதையில் கெளதம் மேனன்- அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர். இரண்டாம் கதையில் வருண்- சாக்‌ஷி, மூன்றாம் கதையில் வருண்- மேகா ஆகாஷ், நான்காம் கதையில் விஜய் சேதுபதி- அதிதி பாலன் ஆகியோர் நடித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version