கிரிக்கெட்

ஐபிஎல் தொடரில் புதிதாக 2 அணிகள் – பிசிசிஐ-யின் ’வாவ்’ திட்டம்

Published

on

கிரிக்கெட் திருவிழா என்றழைக்கப்படும் ‘ஐபிஎல்’ தொடரில் இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்குபெற்று விளையாடி வருகின்றன. இந்நிலையில் அடுத்த ஆண்டு புதிதாக இரண்டு அணிகள் தொடரில் சேர்க்கப்படும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இது குறித்து பிசிசிஐ-யின் தலைவர் சவுரவ் கங்குலி, நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளார். 

கொரோனா பாதிப்பையும் பொருட்படுத்தாமல் 2020-ம் ஆண்டுக்கான ஐபிஎல் சீசனை ஐக்கிய அரபு அமீரகத்தில் பிசிசிஐ வெற்றிகரமாக நடத்தி முடித்து. இந்த போட்டிகளை காண்பதற்கு ரசிகர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. 

இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அட்டவணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. ஏப்ரல் 9-ம் தேதி தொடங்கும் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 

சென்னையில் நடைபெறும் தொடக்க போட்டியில் மும்பை – பெங்களூரு அணிகள் மோதுகின்றன. ஏப்ரல் 10-ம் தேதி நடைபெறும் 2-வது போட்டியில் சென்னை – டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மும்பையில் நடைபெறுகிறது. 

இந்நிலையில் இந்தியாவில் நடக்கும் 2022-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகளில் 10 அணிகள் விளையாட இருப்பதாக தெரிகிறது.

மேலும், இறுதி செய்யப்பட்ட அணிகளின் பட்டியல் வருகிற மே மாதத்தில் வெளியிடப்படும் எனவும், 2022-ம் ஆண்டு 10 அணிகள் கொண்ட ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் எனவும் தெரிகிறது. 

Trending

Exit mobile version