Connect with us

விமர்சனம்

ஹாலிவுட் படங்களுக்கு ரியல் சவால் – 2.0 செம மாஸ்!

Published

on

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்‌ஷய் குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 2.0 திரையரங்குகளில் இந்த மாதத்தில் இன்னொரு தீபாவளியை கொண்டாடி வருகிறது.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இப்படி ஒரு மாபெரும் படத்தை எந்தவொரு தொழில்நுட்ப கோளாறும் இல்லாமல் ஷங்கர் கொடுத்திருப்பது அவரது பல நாள் போராட்டம் மற்றும் உழைப்புக்கு கிடைத்த மகுடமாகவே அமைந்துள்ளது.

இந்த வயதிலும் ரஜினியின் கரிஷ்மா வேற லெவல், நம்பர் ஒன் நம்பர் 2ன்னு இங்க யாரும் இல்ல எப்பவுமே நான் தான் ஒன்லி ஒன் என ரஜினி சொல்லும் வசனம் பல நடிகர்களுக்கு எச்சரிக்கை விடுவதாகவும், அவர்களே மீண்டும் வியக்கும் அளவிற்கு ரஜினி கம்பேக் ஆகியுள்ளார் என்பதையே காட்டுகிறது.

3டி எபெக்ட்ஸ்கள் டைட்டில் கார்டு முதல் நம் கண்முன்னே செய்யும் மேஜிக்கெல்லாம் ஹாலிவுட் படங்களில் கூட நாம் பார்த்திருக்க முடியாது. 4டி சவுண்ட் எஃபெக்ட் திரையில் காட்சிகள் நகராமல் நம் அருகில் காட்சிகளையும் வசனங்களையும் காதுக்கு அருகில் வந்து கூறி, நம்மை மிரள வைக்கின்றன. மொபைல் போனை இனியும் பயன்படுத்த வேண்டுமா என சிந்திக்கவும் வைக்கின்றன.

2.0 கதைக் களம்:

பறவைகளை நேசிக்கும் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார், ஆரம்ப காட்சியிலேயே செல்போன் டவர் மீது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அதற்கடுத்து, சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் செல்போன்கள் மாயமாகின்றன. செல்போன் நெட்வொர்க் முதலாளிகள் அந்நியன் படத்தில் கொல்லப்படுவது போல மிகவும் கொடூரமாக கொல்லப்படுகிறார்கள். இதனால், அரசாங்கம் என்ன செய்வது என்றே தெரியாமல் டாக்டர் வசீகரனின் உதவியை நாடுகின்றனர். அவரும் சிட்டியை மீண்டும் அசம்பிள் செய்கிறார். இருவருக்குள்ளான பாசப் போராட்டம் கூஸ் பம்ப் மொமெண்ட்ஸ்.

சிட்டியால் பறவை அரக்கனை அழிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல், ரெட் சிப்பை பொருத்தி 2.0வை வெளியே கொண்டு வருகின்றனர். வெளியே வரும் 2.0 தனது பழைய மேனரிசத்தை மேலும் 10 மடங்காக காட்டுகின்றது. ஆனால், அதனாலும் வில்லனை தடுக்க முடியவில்லை. இறுதியில், வில்லனின் நெகட்டிவ் எனர்ஜியை எதிர்கொள்ளும் அளவிற்கு ஒரு புதிய டெக்னாலஜியுடன் 3.0 உருவாக்கப்படுகிறது.

ரசிகர்களுக்கு பல சர்ப்ரைஸ்களை படத்தில் 3.0 அள்ளித் தருகிறது. இறுதியில் பறவை அரக்கனை 3.0 அழித்ததா? சாதுவான தாத்தா அக்‌ஷய் குமார் ஏன் இவ்வளவு பெரிய கொடூர வில்லனாக மாறுகிறார். ஆரோ என்றால் என்ன? நெகட்டிவ் எனர்ஜி என்ன செய்யும் என பல கேள்விகளுக்கு கிளைமேக்ஸில் ஷங்கர் விடையளித்து ஒரு கனகச்சிதமான சைஃபை ரோபோ எண்டர்டெயினர் படத்தை படைத்து தனது இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என நிரூபித்துள்ளார். மேலும், 3.0 படத்திற்காக இப்போதே ரசிகர்களை ஏங்கவும் வைத்துள்ளார்.

இந்த வயதிலும் ரஜினி என்னும் நடிப்பு ராட்சசன், தனது உடலை வருத்தி இப்படி நடிப்பதெல்லாம் அபாரம். என்னதான் டூப் போட்டாலும், ரஜினி முகத்தை பார்க்கும் போதெல்லாம் ரசிகர்களுக்கு எழும் எனர்ஜி வேற லெவல்.

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ரசூல் பூக்குட்டியின் இசை அர்ப்பணிப்பு படத்தினை வேறு தளத்திற்கு கொண்டு செல்கிறது.

2.0 மைனஸ்:

2.0 திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக பட்டையை கிளப்பியுள்ளது. ஆனால், லாஜிக் எல்லை மீறல்கள் படத்தில் மேஜிக் செய்வதால் தப்பித்துக் கொள்கின்றன. போராவின் மகன் நெகட்டிவ் எனர்ஜியை திறந்து விடுவதெல்லாம் ஜீரணிக்க முடியாத அறிவியல் லாஜிக் மீறல். ஆனால், நெகட்டிவ் எனர்ஜி பற்றிய ஆராய்ச்சி முடியவில்லை என்பதால், ஷங்கர் சொல்வது தான் இங்கே அறிவியல் கோட்பாடு.

செல்போன் கம்பெனி ஓனர்கள் படத்திற்கு போர்க்கொடி தூக்கினால், அது படத்திற்கு விளம்பரமாகவே அமையும். படத்தை பார்த்து வெளியே வரும் போது நம்முடைய போனை பார்த்து நாம் பயப்படுவோமே ஆனால், அது தான் 2.0 படத்தின் வெற்றி!

ரஜினியின் உடல் நலம் அடுத்த பார்ட்டுக்கு இடம் கொடுக்காது என்று தெரிந்தாலும், ஒவ்வொரு ரசிகனின் ஆசையும் வெயிட்டிங் ஃபார் 3.0 தலைவா தான்!

2.0க்கு எவ்வளவு மார்க்:

2.0வை ரசிகராக பார்த்தால் 100க்கு 150 கூட கொடுக்கலாம். படத்தில் சுமார் 6000பேருக்கும் மேலாக வேலை செய்துள்ளனர். 2500 சிஜி காட்சிகள் பிரேமுக்கு பிரேம் ரசிகனை, கலைஞனை சினிமாக்காரர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. விமர்சக ரீதியில் படத்தை அணுகினால், 100க்கு 65 கொடுக்கலாம். இதுபோன்ற சினிமாக்கள் வெற்றி பெற்றால் தான் தமிழ் சினிமா அடுத்த லெவலுக்கு முன்னேறும்.

தெலுங்கு படமான பாகுபலியை தூக்கி கொண்டாடிய தமிழ் சமூகம் ரஜினியின் 2.0வை படமாக பார்த்து கொண்டாட வேண்டியது தமிழ் சினிமாவிற்கு செய்யும் கடமையாக பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்6 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!