சினிமா செய்திகள்

வெற்றிகரமாக சென்சார் செய்யப்பட்ட 2.0.. என்ன சான்றிதழ் தெரியுமா?

Published

on

ரஜினிகாந்த நடிப்பில் சங்கர் இயக்கத்தில் நீண்ட காலமாகத் தாரிப்பில் உள்ள 2.0 திரைப்படம் 2018 நவம்பர் 29-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சமீபத்தில் 2.0 திரைப்படத்தின் டிரெயலர் வெளியாகி ரசிகர்கள் இடையில் பெறும் வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் விளம்பர பணிகள் ஒரு பக்கம் நடைபெற்று வருவது மட்டும் இல்லாமல் செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாகச் சென்சார் செய்யப்பட்டுள்ளது.

சென்சார் செய்யப்பட்ட 2.0 திரைப்படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ‘U/A’ என்பதால் 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் பெற்றொர்களுடன் தான் இந்தப் படத்தினைப் பார்க்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிக சண்டை காட்சிகள் உள்ளதே 2.0 படம் யு/ஏ சான்றிதழ் பெற்றதற்கான காரணம் ஆகும்.

ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய குமார் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் லைக்கா ப்ரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் 2.0 திரைப்படம் உருவாகியுள்ளது.

2.0 திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையினை ஜீ நெட்வொர்க் மிகப் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version