சினிமா செய்திகள்

சிட்டி ரோபாவால் கூட தமிழ் ராக்கர்ஸை தடுக்க முடியவில்லையே?

Published

on

ரஜினியின் 2.0 திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் திருட்டுத் தனமாக வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி – அக்‌ஷய் குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள 2.0 திரைப்படம் இந்திய சினிமாவின் பெருமை என்ற பாசிட்டிவ் விமர்சனங்களை எல்லா பக்கங்களிலிருந்தும் பெற்று வருகிறது.

இந்நிலையில், 2.0 திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த லைகா, தற்போது டுவிட்டரில், பல்லாயிரக்கணக்கான மனிதர்களின் உழைப்பு, பல நூறு கோடி மதிப்பிலான பட்ஜெட் படம். இதனை பைரசியில் பார்க்காதீர்கள், தமிழ் சினிமாவை வாழ வையுங்கள் என உருக்கத்துடன் ட்வீட் செய்துள்ளது.

முன்னதாக, 2.0 திரைப்படம் திருட்டுத் தனமாக இணையத்தில் வெளிவரக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் படக்குழு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். குறிப்பாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளம், தன்னுடைய இணைய தள முகவரியில் உள்ள எழுத்துகளை மாற்றம் செய்து தொடர்ச்சியாக புதிய படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புதிய திரைப்படங்களை இணையதளங்களில் வெளியிடக் கூடாது என பல முறை நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அந்த உத்தரவை சுட்டிக்காட்டியே ‘தமிழ் ராக்கர்ஸ்’ சவால்விட்டு புதிய படங்களை வெளியிட்டு விடுவதாக லைகா நிறுவனம் சார்பில் புகார் கூறப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி, இணையதள முகவரியில் மாற்றம் செய்த தமிழ் ராக்கர்ஸ்க்கு சொந்தமான சுமார் 2000-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12,567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிடத் தடைவிதித்து இணையதள சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் படம் வெளியான முதல் நாளன்றே நீதிமன்ற தீர்ப்பையும் மீறி தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

பறவை அரக்கனை வீழ்த்திய சிட்டி ரோபோவால் கூட தமிழ் ராக்கர்ஸை தடுக்க முடியவில்லையே!

seithichurul

Trending

Exit mobile version