இந்தியா

நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. உறைய வைத்த நொடி.. அடுத்த என்ன நடந்தது?

Published

on

கொல்கத்தா: கொல்கத்தாவில் நடு வானில் இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதும்படி வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கொல்கத்தாவில் இருந்து டார்ஜிலிங்கில் உள்ள பக்தோக்ரா விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்றுள்ளது. அதே நேரத்தில் அதற்கு எதிர் திசையில் ஏர் ஏசியா விமானம் வந்துள்ளது. இரண்டு விமானத்தையும் சேர்த்து சுமார் 400 பயணிகள் பயணித்து இருக்கிறார்கள்.

இந்த இரண்டு விமானமும் தவறுதலாக 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து இருக்கிறது.ஆனால் விமானம் அருகருகே வந்தவுடன் இரண்டு விமானத்தின் விமானிகளும் சுதாரித்தனர்.

இரண்டு விமானமும் சிக்னலை எழுப்பி இருக்கிறது. இதன் காரணமாக, அந்த விமானங்கள் கடைசி நேரத்தில் வேறு வேறு திசைக்கு திருப்பப்பட்டது.

இதன் காரணமாக மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருக்கும் பயணிகள் அனைவரும் நலமுடன் இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version