சினிமா செய்திகள்

‘தளபதி 65’ படத்தில் இணைந்த முன்னணி காமெடி நடிகர்கள்… துபாயில் ஷூட்டிங்..!

Published

on

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 65’ படத்தில் இரண்டு முன்னணி காமெடி நடிகர்கள் இணைந்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படம் உருவாகி வருகிறது. மாஸ்டர் வெற்றியுடன் தளபதி விஜய் தயாராக இருப்பதால் டாக்டர் படத்துக்கான வெளியீட்டை உறுதி செய்த உடன் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை நெல்சன் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.

மேலும், தளபதி 65 படம் சென்னை, மும்மை உள்ளிட்டப் பகுதிகளில் சில காட்சிகளும் டெல்லியில் அதிகக் காட்சிகளும் துபாயிலும் பெரும்பான்மையான காட்சிகளும் படம் பிடிக்கப்பட உள்ளது. படப்பிடிப்புகளை முதலில் இந்தியாவில் நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் துபாய் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. துபாயில் விஜய்-க்கு கார் சேசிங் சீன் எல்லாம் இருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன.

தற்போது தளபதி 65 படத்தில் காமெடி கதாபாத்திரத்துக்காக நடிகர்கள் யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் இணைந்துள்ளனர். தளபதி விஜய்-க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே இந்தப் படத்தில் நடிக்கிறார். அனிருத் தளபதி 65 படத்துக்கான இசை அமைப்பாளர் ஆக உள்ளார். தளபதி 65 வரும் பொங்கல் 2022-க்கு வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version