இந்தியா

ஒன்றல்ல… இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் ஒப்புதல்!

Published

on

கொரோனா வைரஸின் தீவிரத்தைக் கணக்கில் கொண்டு அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, இனி நாட்டில் இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் பொதுப் பயன்பாட்டுக்கு வரும்.

இந்தியாவைப் பொறுத்தவரை டி.சி.ஜி.ஐ எனப்படும் இந்திய மருந்து கட்டுப்பாடு ஜெனரல்தான், புதிய மருந்துகளுக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும். கொரோனா வைரஸுக்கு எதிராக சீரம் இன்ஸ்டிட்யூட்டின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் ஆகிய மருந்துகளுக்கு டி.சி.ஜி.ஐ ஒப்புதல் கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த அதிரடி கொரோனா தடுப்பூசி அறிவிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவில் உருவாக்கப்பட்ட இரண்டு கொரோனா மருந்துகளுக்கு, அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளதை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்வான்’ என்று உசர்ச்சிப் பொங்க தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிகளானது கொரோனா முன்கள பணியாளர்களுக்கு முதலில் கொடுக்கப்படும். கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுத்த 28 நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும். இதன் மூலம் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவது சீராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கோவாக்ஸின் தடுப்பூசி, கோவிஷீல்டு தடுப்பூசியைவிட மிக அதிக செயல் திறன் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

Trending

Exit mobile version