தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வீட்டுமனை இலவசம்!

Published

on

தடுப்பூசி செலுத்திக் கொண்டால் வீட்டுமனை இலவசம் என்ற அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசின் சுகாதாரத் துறை கடந்த பல மாதங்களாக பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது. அவ்வப்போது தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று சென்னையில் 1600 தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதும், தமிழகம் முழுவதும் 16 ஆயிரம் முகாம்கள் இன்று காலை 7 மணி முதல் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள ஆர்வத்துடன் வரவேண்டும் என்பதற்காக சிறப்பு பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பவானியில் தடுப்பூசி முகாம் இன்று தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் 2 சென்ட் வீட்டுமனை வழங்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் திருவள்ளூர், திருவேற்காடு ஆகிய பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக திருவள்ளூரில் தடுப்பூசி செய்து கொள்பவர்களில் குலுக்கல் முறையில் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்ட்ராய்டு மொபைல் போன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்று பல்வேறு சிறப்பு பரிசுகள் தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இன்று நடைபெறும் தடுப்பூசி சிறப்பு முகாம்களில் ஏராளமான தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version