சினிமா செய்திகள்

2.0 டிரெய்லர் எப்போது.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published

on

ரஜினி காந்த் நடிப்பில் 2015-ம் ஆண்டு முதல் தயாராகி வரும் எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2.0 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

2.0 திரைப்படத்தினை லைகா நிறுவனம் 543 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரித்துள்ள நிலையில் இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகிய படம் என்ற பெருமையினையும் பெற்றுள்ளது.

சென்ற கோடை விடுமுறைக்கே 2.0 திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் கிராப்பிக்ஸ் பணிகளில் ஷங்கர் திருப்தி அடையாத நிலையில் மீண்டும் கிராப்பிக்ஸ் பணிகள் செய்யப்பட்டு நவம்பர் 29-ம் தேதி படத்தினை வெளியிட உள்ளனர்.

இந்நிலையில் 2.0 படத்தினைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் நவம்பர் 3-ம் தேதி டிரெய்லர் வெளியிட இருப்பதாக ஷங்கர், ஏ ஆர் ரகுமான் உள்ளிட்டவர்கள் அதிகாரப்பூர்வமாக டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version