சினிமா

2.0 டிரெய்லர் ரிலீஸ்! 5வது விசை என்ன தெரியுமா?

Published

on

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமிஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆகியுள்ளது.

லைகா நிறுவனம் 400 கோடிக்கும் அதிகமான பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்துள்ளது. சென்னையில், பிரம்மாண்டமாக நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், ஷங்கர், நீரவ் ஷா, லைகா சுபாஸ்கரன், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்படத்திற்கு கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றியுள்ளார். 3டி டிரெய்லரை ரசிகர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

5வது விசை என்றால் என்ன?

5வது விசை குறித்து விஞ்ஞானிகள் இன்றளவும் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்தார். அது ஒரு நெகட்டிவ் எனர்ஜி, அந்த எனர்ஜி பூமியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கினால் என்ன விளைவுகள் ஆகும் என்பதை 2.0 படத்தில் கற்பனை மற்றும் தொழில்நுட்பத்தை கலந்து காண்பித்துள்ளோம் என்றார்.

நடிகர் அக்‌ஷய் குமார் தமிழில் வணக்கம் சென்னை, மகிழ்ச்சி போன்ற வசனங்களை பேசினார். மேலும், விஷாலுக்கு நல்லா சாப்பிடுங்க என்ற டிப்ஸும் அளித்தார்.

seithichurul

Trending

Exit mobile version