சினிமா செய்திகள்

2.0 ஸ்னீக் பீக் ரிலீஸ்; 11 மணிக்கு அலாரம் செட் பண்ணுங்க!

Published

on

ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் ஸ்னீக் பீக், இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் படம் 2.0. சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 2010ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஆன, எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமாக 2.0 உருவாகி வருகிறது.

சிஜி கம்பெனிகள் இந்த படத்தை சொன்ன தேதிக்கு முடித்து தராமல் காலதாமதம் செய்தததால், படத்தின் பட்ஜெட்டும், ரிலீஸ் தேதியும் எகிறியது நாம் அறிந்த ஒன்றே. படம் இந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என ஷங்கர் மீண்டும் அறிவித்துள்ள நிலையில், படத்தின் பணிகள் இன்னமும் நிறைவடைந்ததா என்பது சந்தேகமான ஒன்றே?

இப்படத்தின் டிரெய்லர் இன்னும் வெளியிடப்படாத நிலையில், படத்தின் பற்றிய பேச்சுகள் குறைந்துள்ளதால், படத்தில் உழைத்தவர்களின் கடும் உழைப்பு குறித்த சமாளிஃபிகேஷன்ஸ் ஸ்னீக் பீக்கை இன்று காலை 11 மணிக்கு படக்குழுவினர் வெளியிட உள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version