சினிமா செய்திகள்

2.0 படம் சீனாவில் ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல்?

Published

on

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் எமிஜாக்சன் நடிப்பில் உருவான 2.0 திரைப்படம், இந்தியாவில் சுமார் 600 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது.

சீனாவிலும் இந்த படம் வரும் ஜூலை 12ம் தேதி 50 ஆயிரம் திரையரங்குகளில் கிராண்ட் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, அதே தேதியில் டிஸ்னியின் தி லயன் கிங் படம் திரைக்கு வருகிறது.

இதனால், எதிர்பார்த்த வசூலை 2.0 ஈட்டுமா என்ற சந்தேகம் அந்த படத்தை சீனாவில் வெளியிட இருந்த நிறுவனத்துக்கு வந்துள்ளது. இதனால், ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது.

விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட உள்ளது.

இதனால், 1000 கோடி கிளப்பில் இணையும் கனவு 2.0 திரைப்படத்திற்கு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version