தமிழ்நாடு

17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: முதல்முறையாக போக்சோவில் கைதான 19 வயது பெண்!

Published

on

இதுவரை போக்சோ சட்டத்தில் ஆண்கள் மட்டுமே கைதாகி உள்ள நிலையில் முதல் முறையாக 19 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த யமுனா என்ற 19 வயது பெண் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தார். அந்த பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட வந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவனுடன் பழகி உள்ளார். இருவரும் செல்போன் நம்பரை வாங்கி அடிக்கடி பேசி உள்ளனர்.

இந்த நிலையில் சிறுவனை தான் காதலிப்பதாக யமுனா கூறியதை அடுத்து இருவரும் கடந்த 26ஆம் தேதி பழனிக்குச் சென்று திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. அதன் பின்னர் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருவரும் குடும்பம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறுவனின் பெற்றோர்கள் மகனை காணாமல் காவல் நிலையத்தில் புகார் அளித்து நிலையில் காவல்துறையினர் சிறுவனை தேடிவந்தனர். அப்போது அந்த சிறுவன் வீடு திரும்பியதை அடுத்து அவனிடம் பெற்றோர்கள் விசாரித்தபோது யமுனா தன்னை கடத்திச் சென்று கட்டாய திருமணம் செய்ய வைத்ததாகவும், பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து இது குறித்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் யமுனாவிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது சிறுவனின் ஒப்புதல் இல்லாமல் கட்டாயப்படுத்தி சிறுவனை அழைத்துச் சென்று திருமணம் செய்ததும், பாலியல் பலாத்காரம் செய்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து யமுனா மீது காவல்துறையினர் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். போக்சோ சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து முதல்முறையாக பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version