தமிழ்நாடு

ஒரே மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று: மீண்டும் பள்ளி மூடப்படுகிறதா?

Published

on

ஒரே மாவட்டத்தில் 19 மாணவ மாணவியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்படும் என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது என்பதும், சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததை அடுத்து மீண்டும் செப்டம்பர் 1-ஆம் தேதியிலிருந்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்ட மறுநாளிலிருந்து மாணவ மாணவியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்தது. அதுமட்டுமின்றி ஒருசில ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ மாணவியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பள்ளிகள் திறந்ததில் இருந்து ஒருசிலமாணவ மாணவிகளுக்கு மட்டும் கொரோனா பரவி வந்த நிலையில் இன்று ஒரே மாவட்டத்தில் 19 மாணவ மாணவியருக்கு கொரோனா என்பதால் மீண்டும் பள்ளிகளை மூட சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏற்கனவே எய்ம்ஸ் இயக்குனர் பள்ளிகள் திறப்பதில் அவசரம் காட்ட வேண்டாம் என எச்சரித்தார். இந்நிலையில் அந்த எச்சரிக்கையை மீறி பள்ளிகளை திறந்ததால் தற்போது மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version