இந்தியா

அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 19 நாட்கள் விடுமுறையா?

Published

on

நாடு முழுவதும் வங்கிகளுக்கு 2-வது மற்றும் 4வது சனி மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை என்பது தெரிந்ததே. அந்த வகையில் அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான 9ஆம் தேதியும் 4வது சனிக்கிழமையான 23ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது.

ஆனால் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி முதல் சனிக்கிழமை காந்தி ஜெயந்தி என்பதால் அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றி அக்டோபர் மாதம் மொத்தம் ஐந்து ஞாயிற்றுக் கிழமை வருகிறது என்பதால் சனி ஞாயிறு கிழமைகளில் மட்டுமே எட்டு நாட்கள் விடுமுறையாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய இரு தினங்களும் ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை என்பதாலும், அக்டோபர் 19ஆம் தேதி மிலாடி நபி என்பதாலும் மொத்தம் 11 நாட்கள் விடுமுறை தினமாக வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுபோக ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மொத்தம் 19 நாட்கள் வங்கி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால் வங்கிப்பணிகளை முன்கூட்டியே திட்டமிட அறிவுறுத்தப்படுகிறது.

அக்டோபர் மதம் வங்கி விடுமுறை குறித்த முழு விவரங்களை தற்போது பார்ப்போம்

அக்., 1 அரையாண்டு கணக்கு முடிவு சிக்கிம்
அக்., 2 காந்தி ஜெயந்தி
அக்., 3 ஞாயிறு
அக்., 6 மஹாளய அமாவாசை திரிபுரா, கர்நாடகா, மேற்கு வங்கம்
அக்., 7 மேரா சவுரென் ஹவுபா லெய்னினங்தோ சனமஹி மணிப்பூர்
அக்., 9 சனிக்கிழமை
அக்., 10 ஞாயிறு
அக்., 12 மஹா சப்தமி திரிபுரா, கர்நாடகா
அக்., 13 மஹா அஷ்டமி திரிபுரா, ஒடிசா, சிக்கிம், அசாம், மணிப்பூர், மேற்கு வங்கம், பீஹார், ஜார்க்கண்ட்.
அக்., 16 துர்கா பூஜா சிக்கிம்
அக்., 17 ஞாயிறு
அக்., 18 கதி பிஹு அசாம்
அக்., 19 மிலாடிநபி
அக்., 20 மகரிஷி வால்மிகி ஜெயந்தி திரிபுரா, கர்நாடகா, சண்டிகர், மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம்
அக்., 22 மிலாடிநபியை தொடர்ந்து வரும் வெள்ளி ஜம்மு – காஷ்மீர்
அக்., 23 4வது சனிக்கிழமை
அக்., 24ஞாயிறு
அக்.,26 அக்செஷன் டே ஜம்மு – காஷ்மீர்
அக்., 31 ஞாயிறு

இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

Trending

Exit mobile version