தமிழ்நாடு

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. காலை 10:30 மணிக்குத் தீர்ப்பு!

Published

on

சென்னை: டிடிவி தினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் 18 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை இன்று 3 வது நீதிபதியான எம் சத்திய நாராயணன் அளிக்க உள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்ததை அடுத்து சட்டப்பேரவை தலைவர் தணப்பால் அவர்கள் அனைவரையும் சென்ற பிப்ரவரி ஆதம் தகுதி நீக்கம் செய்தார்.

இதனை எதிர்த்துத் தங்கத்தமிழ் செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கினை தொடர்ந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்து முதல் இரண்டு நீதிபதிகளில் ஒருவர் தகுதி நீக்கம் சரி என்றும், மற்றோறுவர் தவறு என்றும் கூறியதால் 3 நீதிபதி மரவுக்கு மாற்றப்படு விசாரணை நடைபெற்று வந்தது.

அந்த விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10:30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு 18 எம்எல்ஏக்களுக்குச் சாதகமாக வந்தால் எடப்பாடி அரசு கவிழும் அபாயமும் உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version