சினிமா

18 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.1000 கோடி வசூல் சாதனை படைத்த ‘அபோகாலிப்டோ’ – ஓடிடியில் கண்டிப்பாக பார்க்கவேண்டிய திரில்லர்!

Published

on

கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு, 2006-ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம், ரூ.1000 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. இது தற்போது சாதாரணமாகக் கருதப்படும் பான் இந்தியா படங்கள் போல அல்ல, அந்த காலத்தில் கோடிகளில் வசூல் செய்வது மிகப் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. இந்தப் படம் உலகமெங்கும் பிரம்மிக்க வைக்கும் சாதனை படைத்து, ஆஸ்கர் விருதுகளின் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ஒரு மாபெரும் படமாகத் திகழ்கிறது.

இப்படத்தின் பெயர் ‘அபோகாலிப்டோ’. மெல் கிப்சன் இயக்கிய இப்படம், 2006 ஆம் ஆண்டு வெளியானது. மாயன் நாகரிகத்தை மையமாகக் கொண்டு, மர்மங்கள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கூறும் இப்படம், அதிபர் மக்களை அடக்கி ஆட்சி செய்யும் காலத்தை வர்ணிக்கிறது.

இந்தப் படத்தில், ரூடி யங் பிளட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஒரு வீரன் தனது குடும்பத்தை காப்பாற்றக் காடுகளில் போராடும் கதை, திரைப்படத்தின் முக்கிய மையமாக அமைந்துள்ளது. பழங்குடியினர் அவரை பலியிட அழைத்து வரும்போது, வீரன் பல தடைகளைக் கடந்து தனது குடும்பத்தை காப்பாற்றிக்கொள்ளுகிறார்.

‘அபோகாலிப்டோ’ படத்தின் பட்ஜெட் 40 மில்லியன் டாலர்கள். இது தற்போது ரூ.334 கோடி மதிப்புடையது. இப்படம் உலகமெங்கும் 120.7 மில்லியன் டாலர்கள் வசூலித்துள்ளது, அதாவது இப்போது ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல்.

இப்படம் தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் கிடைக்கிறது. ஒவ்வொரு திரைப்பட ரசிகரும் மிஸ் செய்யக்கூடாத இப்படம், திரையுலக வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.

Poovizhi

Trending

Exit mobile version