தமிழ்நாடு
தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்தை நெருங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சென்னை சென்னையில் முதல் முதலாக 6 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்:
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 17,897
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 11,48,064
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 5,445
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 107
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 13,933
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 15,542
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 10,21,575
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 135,408
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 221,40,645