தமிழ்நாடு
காவல்துறையில் 17 உயரதிகாரிகள் இடமாற்றம்: உள்துறை செயலாளர் உத்தரவு
நிர்வாக வசதிக்காகவும் காவல்துறை உயரதிகாரிகளின் விருப்பத்திற்கு இணங்கவும் அவ்வப்போது காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் காவல் துறையில் 17 உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு 8 துணை ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, கிரைம் பிரிவு, நிர்வாகம் என தலா நான்கு துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று உள்துறை செயலாளர் அறிவித்துள்ளார்
தமிழ்நாடு காவல்துறையில் 17 உயர் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறையின் உயர் அதிகாரிகளின் முழு விபரங்கள் இதோ: