சினிமா செய்திகள்

17 மொழிகளில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம்: தனுஷ் ரசிகர்கள் குஷி!

Published

on

தனுஷ் நடித்த திரைப்படம் ஒன்று 17 மொழிகளில் வெளியாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ’ஜகமே தந்திரம்’ இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று உறுதி செய்யப்பட்டது என்பதும் ஜூன் 18-ம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படம் தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் கன்னடம் ஆங்கிலம் உள்பட மொத்தம் 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு உள்ளதாகவும் ஓடிடியில் இந்த படம் 17 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தமிழ்படம் 17 மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறை என்பதும் இந்தப் பெருமையை தனுஷ்க்கு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ’ரகிட ரகிட ரகிட’ என்ற பாடலும் என்னை மட்டும் லவ்வு பண்ணு புஜ்ஜி’ என்ற பாடலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் சுப்புராஜின் முந்தைய படமான பேட்ட திரைப்படம் நல்ல வெற்றி பெற்றுள்ள நிலையில் அவருடைய அடுத்த படமான ஜகமே தந்திரம் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version