தமிழ்நாடு

ஆல்பாஸ் என்றாலும் பிளஸ் 2 தேர்வில் 1,656 பேர் தேர்ச்சி இல்லை: ஏன் தெரியுமா?

Published

on

பிளஸ் டூ தேர்வில் ஆல்பாஸ் என அனைத்து மாணவர்களும் பாஸ் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 1,656 பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று காலை 11 மணிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பிளஸ்டூ மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளார் இந்த ஆண்டு மொத்தம் 8,16,473 பேர் +2 வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், 1656 பேர் பள்ளிக்கு வரவில்லை என்பதாலும், அவர்கள் எந்த தேர்வும் எழுதவில்லை என்பதாலும் தேர்ச்சி பெறவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். எனவே பள்ளிக்கு வராத, எந்த தேர்வுகளும் எழுதாத மாணவர்கள் 1656 பேர் தேர்ச்சி பெறவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை ஜூலை 22 தேதி முதல் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்று கூறிய அமைச்சர், இந்த ஆண்டு +2 பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண் எடுத்தவர்கள் யாரும் இல்லை என்றும் இந்த ஆண்டு பிளஸ் 2வில் 3,80,500 மாணவர்களும், 4,35,973 மாணவியர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும், பொதுப்பாடப்பிரிவு 7,64,593 மாணவர்கள், தொழிற்பாடப்பிரிவில் 51,880 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்

மேலும் இந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாத மாணவர்கள் ஜூலை 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

அதேபோல் தனித்தேர்வர்களுக்கு விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.,

seithichurul

Trending

Exit mobile version