கிரிக்கெட்

“16 Years of Dhonism!”- தோனியின் 16 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கை; கொண்டாடும் ரசிகர்கள்!

Published

on

இந்திய கிரிக்கெட்டின் ‘மன்னாதி மன்னன்’ தல மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் தோனி ரசிகர்கள், ‘காமன் டிபி’ உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதையொட்டி #16YearsOfDHONIsm என்கிற ஷாஷ்-டேக் டிராண்டாகி வருகிறது.

கடந்த 2004 ஆம் ஆண்டு, டிசம்பர் 23 ஆம் தேதி, வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் தோனி. அந்தப் போட்டியில் 7வதாக களமிறங்கிய தோனி, டக்-அவுட் ஆனார். ஆனால், அன்று மட்டுமே அவருக்கு சறுக்கல். அதன் பிறகு தோனி தொட்டது எல்லாம் வெற்றிதான்.

2007 ஆம் ஆண்டு இந்திய டி20 அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு தோனிக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு இளம் அணியை கோப்பை வெல்ல வைத்தார் தோனி. தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலும் அணியைத் திறம்பட வழிநடத்தி, கோப்பையை வென்றார் தோனி. இதனால் அவரின் புகழ் உச்சத்துக்கு சென்றது. இந்நிலையில் இந்த ஆண்டு நடுவாக்கில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்து விட்டார். என்னதான் தோனி ஓய்வு பெற்றுவிட்டாலும், அவரது ரசிகர்கள், தொடர்ந்து அவரின் சாதனைகளைக் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் சில ட்வீட்கள்:

Trending

Exit mobile version