தமிழ்நாடு

உதயநிதியை வாழ்த்தும் திமுகவினர்: சட்டசபையில் கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார்!

Published

on

முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினி மகனுமான நடிகர் உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திமுகவின் குடும்ப அரசியலாகவே இது பொதுவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக சட்டசபையில் பேசும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் பேசுவதற்கு முன்னர் உதயநிதி ஸ்டாலின் திமுக இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர் தான் தக்கள் உரையை தொடங்குகிறார்கள்.

இதனை கிண்டலடிக்கும் விதமாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் பேசியுள்ளார். அதில், எல்லாரையும் வாழ்த்துறீங்க, உங்க இனமான பேராசிரியர் அன்பழகனையும் கொஞ்சம் ஞாபகம் வச்சுக்கோங்கப்பா என கிண்டலாக பேசியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version