தமிழ்நாடு

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 15 தீர்மானங்கள்!

Published

on

இன்று காலை நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஈபிஎஸ், ஓபிஎஸ் இடையில் உள்ள கருத்து முரன் போன்றவற்றுக்கு இடையில் இன்று அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அடுத்த முதல்வர் வேட்பாளர் குறித்து தற்போதைக்கு விவாதிக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டன. அதுகுறித்து இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) கொரோனா காலத்தில் அயராது உழைத்த முதல்வர் மற்றும், துணை முதல்வரைப் பாராட்டி தீர்மானம்.

2) கொரோனா தடுப்பு பணிகளுக்கு அரசு கூடுதல் நிதி உதவி வழங்க வலியுறுத்த வேண்டும்.

3) மேகதாதுவில் அணை கட்ட முயற்ச்சித்து வரும் கர்நாடக அரசு தடுத்து நிறுத்தியதாக, தமிழக அரசுக்கு பாராட்டு.

4) நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

5) காவேரி டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளான் மண்டலமாக அறிவித்த தமிழக அரசுக்கு பாராட்டு.

6) 2021 தேர்தலில் அதிமுக அரசு தொடர, தொண்டர்கள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

7) ரூ.14 ஆயிரம் கோடி செலவில் காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை -குண்டாறு இணைப்பைச் செயல்படுத்தும் தமிழக அரசுக்கு நன்றி.

8) ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களை அழகுற அமைக்கும் தமிழக அரசுக்கு நன்றி.

9) மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.

10) 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க அனுமதி பெற்ற தமிழக அரசுக்கு நன்றி.

11) ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் இதர திட்டங்களுக்கு மானியத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

12) தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்க வேண்டும்.

13) கொரோனா காலத்தில் சிறப்பாக பொதுப்பணி செய்து வந்த அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி.

14) தமிழ் நாட்டில் கொரோனா காலத்திற்கு பிந்தைய சூழலில் பொருளாதாரத்தை மீட்டெடுத்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடப் பொருளாதார வல்லுநர் திரு.சி.ரங்கராஜன் தலைமையில் 24 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைத்தற்கு, தமிழக முதல்வருக்குப் பாராட்டு.
15) நீட் தேர்வு அமலாகிடக் காரணமாக இருந்துவிட்டு, தற்போது கபட நாடகமாடி வரும் திமுகவுக்குக் கண்டனம்.
seithichurul

Trending

Exit mobile version