தமிழ்நாடு

சென்னையில் விடிய விடிய கனமழை: பல விமானங்கள் ரத்து!

Published

on

சென்னையில் கடந்த சில மாதங்களாக வெயில் கொளுத்தி வந்த நிலையில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்ததால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்தததன் காரணமாக தட்ப வெப்பநிலை குளிர்ச்சியாக காணப்படுவதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னையில் இருந்து கிளம்ப கூடிய பெரும்பாலான விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னையிலிருந்து புறப்படும் 8 சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் தாமதமாக கிளம்பின சென்றதாகவும் அதேபோல் சென்னைக்கு வர வேண்டிய விமானங்கள் கனமழை காரணமாக பெங்களூர் மற்றும் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலேசியா, தாய்லாந்து, ஐதராபாத், டெல்லி ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு வந்த 12 விமானங்கள் கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் தத்தளித்தன என்றும் அதன் பிறகு தீவிர முயற்சிக்கு பின் தரையிறக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விமானங்கள் மற்றும் என்றும் சாலைப் போக்குவரத்தும் கடும் சிக்கலில் இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

seithichurul

Trending

Exit mobile version