இந்தியா

ஆகஸ்ட் 14-ம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு நாள்.. பிரதமர் மோடி அறிவிப்பு!

Published

on

நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

“பிரிவினையால் ஏற்பட்ட வலிகளை ஒருபோதும் மறக்க இயலாது. லட்சக்கணக்கான நமது சகோதர, சகோதரிகள் இடம்பெயர்ந்ததுடன், பொறுப்பற்ற வெறுப்பு மற்றும் வன்முறையால் ஏராளமானோர் தங்களது உயிர்களை இழந்தனர். நமது மக்களின் போராட்டங்கள் மற்றும் தியாகங்களின் நினைவாக, ஆகஸ்ட் 14-ஆம் தேதி, பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினமாக அனுசரிக்கப்படும்.

சமூகப் பிரிவுகள், ஒற்றுமையின்மை ஆகியவற்றின் நஞ்சை நீக்கி, ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் மனித மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் தேவையை பிரிவினையின் அதிர்ச்சி ஏற்பட்டதன் நினைவு தினம் நமக்கு தொடர்ந்து நினைவூட்டட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version