தமிழ்நாடு

தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு 

Published

on

தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு 
கொரோனா  நோய்  பரவலைத் தடுக்க மத்திய அரசும்,மாநில  அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.நேற்று ஒரு நாள் சுயஉரடங்கை கடைப்பிடித்த மக்கள் இன்று வழக்கம் போல் தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
இது நோய்  பரவலை அதிகரிக்கும் என்று கருதி மாநில  அரசு மாநிலம்  முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தி இருக்கிறது.
இது தொடர்பாக இன்று சட்டசபையில் அறிவிப்பை வெளியிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.அறிக்கை வருமாறு :
கொரோனா  பரவலைத் தடுக்க மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட எல்லைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.பால்,காய்கறி,குடிநீர்,இறைச்சி உட்பட அத்தியாவசிய பொருட்கள் தடை இல்லை .
மருந்துக் கடைகள் திறந்து இருக்கும்.
அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க தடை இல்லை.பேருந்து ,ஆட்டோ உள்பட பொது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை வரும் மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும்.
தனியார் நிறுவன பணியாளர்கள் வீடுகளிலிருந்து பணி  செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மாவட்ட எல்லைகளும் ,மாநில  எல்லைகளும்  மூடப்படும்.நாளை மாலை 6 மணியிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
seithichurul

Trending

Exit mobile version