இந்தியா

மே மாதம் முழுவதும் 144 தடை உத்தரவு: அதிரடி அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் படிப்படியாக உயர்ந்து வருவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஊரடங்கு உத்தரவு போன்ற கட்டுப்பாடுகள் வருமோ என்றும் ஒரு சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் உள்பட பல மத வழிபாட்டு நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கூடாது என்பதற்காக இந்த தடை உத்தரவு போடப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

மே மாதம் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை எந்த வழிபாட்டு தலங்களுக்கும் எந்த வழிபாட்டு கொண்டாட்டங்களுக்கும் அனுமதி இல்லை என்று கூறியுள்ள மாவட்ட நிர்வாகம் போராட்டங்கள் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளது .

பொதுமக்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மீண்டும் ஒருமுறை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் மக்களால் தாங்க முடியாது என்றும் அதனால் மக்கள் இதனை புரிந்து கொண்டு அரசின் இந்த கட்டுப்பாடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version