தமிழ்நாடு

தமிழகத்தில் 144 தடை: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது என்பதும், சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள கோயில்கள் மூடப்பட்டுள்ளன என்பதும், அது மட்டுமின்றி கோவில் திருவிழாக்கள் உள்பட எதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் நகராட்சியில் வணிக நிறுவனங்கள் செயல்படும் 7 பகுதிகளில் நாளை முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், பொதுமக்கள் இந்த கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெரம்பலூர் சிவன் கோவில் முதல் வானொலி திடல் வரை, வானொலி திடல் முதல் பழைய பேருந்து நிலையம் வரை, பழைய பேருந்து நிலையம் முதல் காமராஜர் வளைவு வரை, பழைய பேருந்து நிலையம் மார்க்கெட் பகுதி மற்றும் போஸ்ட் ஆபிஸ் தெரு, கடைவீதி என்எஸ்பி ரோடு, பழைய பேருந்து நிலையம் சுற்றியுள்ள பகுதிகள் ஆகியவற்றில் ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 6 மணிவரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அரும்பாவூர் பேரூராட்சி லப்பைக்குடிகாடு பேரூராட்சி ஆகிய பகுதிகளிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் தடை உத்தரவு உள்ள பகுதிகளில் மருந்தகங்கள் மற்றும் பால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்காக செயல்படும் கடைகளுக்கு அனுமதி உண்டு என்றும் அந்த கடைகள் கொரோனா வைரஸ் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version